Newsworld Finance Market 0711 20 1071120022_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை: தங்க‌ம் வெள்ளி விலை குறைந்தது

Advertiesment
மும்பை: தங்க‌ம் வெள்ளி விலை குறைந்தது
மும்பை சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.350, 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.105 குறைந்தது.

அந்நிய நாட்டு சந்தைகளில் இருந்து வந்த தகவல்களால், அதிகளவு தங்கம், வெள்ளி விற்பனைக்கு வந்தது. இதனால் இவற்றின் விலை குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

சிங்கப்பூர் தங்கம், வெள்ளி சந்தையில் கடந்த மூன்று வாரங்களில் இருந்த விலையை விட, தங்கத்தின் விலை குறைந்தது. அமெரிக்க பொருளைதாரத்தின் நெருக்கடியால் முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்பனை செய்தனர். அதிகளவு தங்கம் விற்பனைக்கு வந்ததால் சிங்கப்பூர் ச‌ந்தையில் தங்கத்தின் விலை குறைந்தது.

நியுயார்க் சந்தையிலும் தங்கத்தின் விலை குறைந்தது. நேற்று நியுயார்க் சந்தையில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 777.30/777.90 டாலராக குறைந்தது. ஒரு நிலையில் விலை 774.90 டாலராக இருந்தது. இங்கு வெள்ளிக் கிழமையன்று 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 780.10/780.90 டாலராக இருந்தது.

வெள்ளியின் விலையும் 1 அவுன்ஸ் 14.22/14.27 டாலரில் இருந்து 14.17/14.22 டாலராக குறைந்தது.

இன்று காலை விலை நிலவரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 10,010
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 9,965
பார் வெள்ளி 1 கிலோ ரூ. 18,980

Share this Story:

Follow Webdunia tamil