மும்பை மொத்த சந்தையில் சர்க்கரை விலை குறைந்தது. தனியார் சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இருந்து விற்பனைக்கு அதிகளவு சர்க்கரை வந்தது. அதே நேரத்தில் சர்ககரை வாங்குவது மந்த நிலையில் இருந்ததால் விலை குறைந்ததாக வர்த்தககர்கள் தெரிவித்தனர்.
எஸ்-30 ரக சர்க்கரை குவின்டாலுக்கு ரூ. 10, எம்-30 ரக சர்க்கரை குவின்டாலுக்கு ரூ.15 குறைந்தது. இதே போல் ஆலை வாயிலில் விற்கப்படும் சர்க்கரையின் விலையும் குவின்டாலுக்கு எஸ்-30 ரகத்திற்கு ரூ.10, எஸ்-30 ரகத்திற்கு ரூ.20 குறைந்தது.
இன்றைய விலை நிலவரம்.
எஸ்-30 ரகம் குவின்டால் ரூ.1,320/1,386
எஸ்-30 ரகம் குவின்டால் ரூ.1,370/1,480.
ஆலை வாயில் விலை
எஸ்-30 ரகம் குவின்டால் ரூ.1,300 /1,330
எஸ்-30 ரகம் குவின்டால் ரூ.1,360/1,380.