மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.15-ம், 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.10-ம் அதிகரித்தது.
டோக்கியோ சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வினால் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பிலும், யென் நாணயத்திற்கு நிகரான டாலரின் மதிப்பு குறைந்த காரணத்தினாலும் தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்து காணப்பட்டது. இதனால் தங்கத்தின் விலை உயர்ந்தது.
நியூயார்க் சந்தையிலும் தங்கத்தின் விலை அதிகரித்தது. 1 அவுன்ஸ் தஙகம் 791.50 / 792.30 டாலராக இருந்தது. வெள்ளிக் கிழமை விலை 1 அவுன்ஸ் 784.80 / 785.50 டாலர்.
நியுயார்க் சந்தையில் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 14.60 / 14.65 டாலர். வெள்ளிக் கிழமை விலை 14.44 / 14.49 டாலர்.
இன்றைய விலை நிலவரம்.
தங்கம் 24 காரட் 10 கிராம். ரூ.10,110
தங்கம் 22 காரட் 10 கிராம் ரூ.10,060
பார் வெள்ளி கிலோ ரூ.19,315.