மும்பை பங்குச் சந்தையில் 65 புள்ளிகள் சரிந்தது. ஆனால் தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 0.80 புள்ளி அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் 247 புள்ளிகள் அதிகரித்தது. ஆனால் தொடர்ந்து படிப்படியாக ஏற்பட்ட சரிவால் இறுதியில் சென்செக்ஸ் 65 புள்ளிகள் குறைந்து 19,633.36 புள்ளிகளில் முடிந்தது. அதே நேரத்தில் மிட்கேப் 218.44 புள்ளிகளும், சுமால் கேப் 292.16 புள்ளிகளும், பி.எஸ்.இ-500 71.73 புள்ளிகளும் அதிகரித்தன.
தேசிய பங்குச் சந்தையிலும் பங்குகள் விலை ஏற்ற இறக்கமாக இருந்தது. இறுதியில் நிப்டி 0.80 புள்ளிகள் அதிகரித்தது.
சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் ஏ.சி.சி, அம்புஜா சிமென்ட், கிரேசம், ஹின்டால்கோ, மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, ஹிந்துஸ்தான் யூனிலிவர், ரிலையன்ஸ் எனர்ஜி,ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், டி.சி.எஸ், சிப்லா, டி.எல்.எப், என்.டி.பி.சி, ஒ.என்.ஜி.சி, ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிகரித்தன.
எஸ்.பி.ஐ, விப்ரோ, பார்தி ஏர்டெல், பி.ஹெச்.இ.எல், எல்.அண்ட்.டி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ஹெச்.டி.எப்.சி, ஹெச்.டி.எப்.சி வங்கி, ஐ.சி.ஐ,சி.ஐ வங்கி,
இன்போசியஸ், ஐ.டி.சி, சத்யம் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தன.