Newsworld Finance Market 0711 19 1071119025_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம்!

Advertiesment
சென்செக்ஸ் நிஃப்டி தேசிய பங்குச் சந்தை
, திங்கள், 19 நவம்பர் 2007 (17:27 IST)
இன்று காலையில் மும்பை பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கியபோதே சென்செக்ஸ் 247 புள்ளிகள் அதிகரித்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டியும் 74.95 புள்ளிகள் அதிகரித்தது.

அந்நிய நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் எல்லா பிரிவு பங்குகளை வாங்குவதிலும் ஆர்வம் காண்பித்தனர்.

காலையில் இருந்த நிலைமை சிறிது நேரத்திற்கு பிறகு மாறியது. பங்குகளின் விலை குறைந்து சென்செக்ஸ் புள்ளிகள் குறைய தொடங்கியது. காலை 11.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 71.22 புள்ளிகள் அதிகரித்து சென்செக்ஸ் 19,769.58 புள்ளிகளாக இருந்தது.
மிட் கேப் 185.57 புள்ளிகளும், சுமால் கேப் 262.65 புள்ளிகளும், பி.எஸ்.இ - 500 99.12 புள்ளிகளும் அதிகரித்து காணப்பட்டது.

தேசிய பங்குச் சந்தையின் நிப்டி 44.45 அதிகரித்து 5951.30 புள்ளிகளாக இருந்தது. அதே போல் மற்ற பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்து காணப்பட்டன.

சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் ஹின்டால்கோ, ஹிந்துஸ்தான் யூனிலிவர், மாருதி, என்.டி.பி.சி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, எஸ்.பி.ஐ, விப்ரோ, ஏ.சி.சி, அம்புஜா சிமென்ட், பஜாஜ் ஆட்டோ, கிராசிம், இன்போசியஸ், பார்தி ஏர்டெல் எல்.அண்ட்.டி, ரீலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் எனர்ஜி, ரிலையன்ஸ் இனஅடஸ்டிரிஸ், ரான்பாக்ஸி, பி.ஹெச்.இ.எல், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், சிபர்லா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தது.
ஐ.சி.ஐ,சி.ஐ வங்கி, ஹெச்.டி.எப்.சி வங்கி, ஹெச்.டி.எப்.சி, ஐ.டி.சி, சத்யம் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.


Share this Story:

Follow Webdunia tamil