மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் இன்று நேற்று இருந்த நிலைமை மாறியது. நேற்று இரண்டு பங்குச் சந்தைகளின் விலைக் குறியீட்டு எண்கள் குறைந்து, முதலீட்டாளர்களை அச்சப்பட வைத்தது.
இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குகளின் விலைகள் அதிகரித்து குறியீட்டு எண்களும் உயர்ந்தன. ஆனால் இதே நிலை மாலை வரை நீடிக்குமா என்பது கேள்விக்குறியே.
இன்று காலை மும்பை, தேசிய பங்குச் சந்தைகளின் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் காலை 11.15 நிலவரப்படி சென்செக்ஸ் நேற்றைய இறுதி நிலவரத்தைவிட 79.27 புள்ளிகள் அதிகரித்து 19,816.54 புள்ளிகளாக இருந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 9.85 புள்ளிகள் அதிகரித்து 5626.95 புள்ளிகளாக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மற்ற பிரிவுகளான மிட்கேப் 139.57 புள்ளிகள், சுமால் கேப் 185.78 புள்ளிகள், பி.எஸ். இ- 500 65.17 புள்ளிகள் அதிகரித்தன.
தேசிய பங்குச் சந்தையில் தகவல் தொழில் நுட்ப பிரிவு குறியீட்டு எண் மட்டும் குறைந்திருந்தது. மற்ற பிரிவு குறியீட்டு எண் உயர்ந்து இருந்தது.
மும்பை சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் ஹெச்.டி.எப்.சி, ஹெச்.டி.எப்.சி வங்கி, எல்.அண்ட். டி, ரிலையன்ஸ் கம்யுனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ரிலையன்ஸ் எனர்ஜி, ஏ.சி.சி, பஜாஜ் ஆட்டோ, சிப்லா, ஹுன்டால்கோ, எஸ்.பி.ஐ, பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை அதிகரித்தன.
மாருதி, மதேந்திரா அண்ட் மகேந்திரா, ஒ.என்.ஜி.சி, ரான்பாக்ஸி, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஏ.சி.எல், டாக்டர் ரெட்டி, கிராசிம், இன்போசியஸ், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, சத்யம், டி.சி.எஸ், விப்ரோ, ஹுந்துஸாதான் யூனிலிவர் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை குறைந்தன.