Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாலர் மதிப்பு உயர்வு!

டாலர் மதிப்பு உயர்வு!

Webdunia

, திங்கள், 12 நவம்பர் 2007 (19:42 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3.5 பைசா குறைந்தது.

காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து 1 டாலர் ரூ.39.29 பைசா முதல் ரூ.39.35 / 39.37 என்று விற்பனையானது. டாலரின் மதிப்பு குறைந்து 1 டாலர் ரூ.39.30 என்ற நிலையை எட்டியவுடன், ரிசர்வ் வங்கி தலையிட்டு டாலரை அதிகளவு வாங்கி, டாலரின் மதிப்பு சரியாமல் பார்த்துக் கொண்டதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

பங்குச் சந்தையில் பங்குகளின் விலை சரிவு, ரிசர்வ் வங்கியின் தலையீட்டால் 1 டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.39.36 /39.37 என்ற அளவில் முடிந்தது வெள்ளிக் கிழமை இறுதி விலையை விட 3.5 பைசா அதிகம். புதன் கிழமை இறுதி விலை 1 டாலர் ரூ.39.32 / 39.33

Share this Story:

Follow Webdunia tamil