Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை : தங்கம் வெள்ளி விலை குறைவு!

Advertiesment
மும்பை : தங்கம் வெள்ளி விலை குறைவு!

Webdunia

, திங்கள், 12 நவம்பர் 2007 (15:03 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.241ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.191ம் குறைந்தது.

டோக்கியோ சந்தையில் தங்கத்தின் விலை 1 விழுக்காடு குறைந்தது. அத்துடன் பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை இறக்கம், பங்குச் சந்தைகளின் சரிவு போன்ற காரணங்களால் கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்பனை செய்து இலாபம் பார்க்க வர்த்தகர்கள் ஆரம்பித்தனர். இதன் விளைவாக விற்பனைக்கு அதிகளவு தங்கம் சர்வதேச சந்தையிலில் வந்தது. இதுவே தங்கம், வெள்ளி விலை குறையக் காரணம்.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்ததால், மும்பையிலும் விலை குறைந்தது.

நியுயார்க் சந்தையில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 16 டாலர் குறைந்தது. வெள்ளிக் கிழமை 1 அவுன்ஸ் 832.30/ 833.10 டாலராக விற்பனையானது. இன்று இதன் விலை 1 அவுன்ஸ் 816.40 / 817.10 டாலராக குறைந்தது.

இதே போல் வெள்ளியின் விலையும் அவுன்ஸ் 33 சென்ட் குறைந்தது. இதன் விலை வெள்ளிக் கிழமை 1 அவுன்ஸ் 15.47/ 15.52 டாலராக இருந்தது. இன்று 15.11 / 15.18 டாலராக குறைந்தது.

இன்று காலை விலை நிரவரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,470
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,420

பார் வெள்ளி கிலோ ரூ.19,880

Share this Story:

Follow Webdunia tamil