வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வர்த்தகம் தொடங்கியவுடன் டாலரின் மதிப்பு குறைந்தது. ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் பங்குகளின் விலை குறைந்து, அவைகளின் குறியீட்டு எண் சரிகின்றது என்ற தகவல் வந்தது. இதை தொடர்ந்து ஏற்றுமதியாளர்கள் அதிகளவு டாலரை விற்பனை செய்தனர். இதுவே டாலரின் மதிப்பு சரிய காரணம்.
காலையில் இந்திய ரூபாய்க்கு நிகரான 1 டாலரின் மதிப்பு ரூ.39.35 / 39.37 ஆக குறைந்தது. பிறகு சிறிது டாலரின் மதிப்பு அதிகரித்து 1 டாலர் ரூ.39.33 / 39.34 என உயர்ந்தது.
சென்ற வாரம் கடைசி வர்த்தக நாளான வியாழக்கிழமை மாலை 1 டாலரின் மதிப்பு ரூ.39.32 / 39.33 என இருந்தது.