நாட்டின் உள்நாட்டு கார் விற்பனை 14.6 விழுக்காடு அளவுக்கு அக்டோபர் மாதம் அதிகரித்துள்ளது. இதே காலத்தில் இருசக்கர வாகனங்களின் விற்பனை 6.7 என்ற அளவுக்கு குறைந்துள்ளது.
நடப்பு ஆண்டில் கடந்த அக்டோபர் மாதம் 1,05,878 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் 92,389 கார்கள் விற்பனை செய்யப்பட்டதாக இந்திய வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதே காலத்தில் இருசக்கர வாகனங்களின் விற்பனை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7,05,467 ஆகவும், இந்த ஆண்டு 6,57,874 ஆக குறைந்துள்ளது. எனினும் ஸ்கூட்டர் விற்பனை 84,860 என்ற அளவில் இருந்து அதிகரித்து 98,752 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.