வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சி அடைந்தது.
இன்று காலையில் அந்நியச் செலவாணி வர்த்தகம் தொடங்கியவுடன் 1 டாலர் ரூ.39.18 பைசா என்ற அளவில் விற்பனையானது. இது நேற்றைய இறுதி நிலவரத்தைவிட 12 பைசா குறைவு (நேற்றைய இறுதி விலை ரூ.39.30/39.31).
பிறகு நிலைமை சிறிது மாறி டாலரின் மதிப்பு அதிகரித்தது. 1 டாலர் ரூ.39.25/ 39.26 என அதிகரித்தது.
டாலரின் மதிப்பு வீழ்ச்சி அடையாமல் இருக்க ரிசர்வ் வங்கி தலையிட்டு, அதிகளவு டாலரை வாங்கியது. இதனால் ஒரு அளவுக்கு மேல் டாலரின் மதிப்பு குறைவும், இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பதும் தடுக்கப்பட்டது.
இன்று ஏற்றமதியாளர்கள் அதிகளவு டாலரை விற்பனை செய்ததால் டாலரின் மதிப்பு சரிந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
ரிசர்வ் வங்கி, இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு குறையாமல் இருக்க செப்டம்பர் மாதத்தில் அந்நியச் செலவாணி சந்தையில் இருந்து 1,600 கோடி டாலரை வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.