மும்பை பங்குச் சந்தையிலும் தேசிய பங்குச் சந்தையிலும் பங்குகளின் விலை மாற்றத்தால் குறியீட்டு எண்கள் அதிகளவு ஏற்ற இறக்கத்துடன் உள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கிய 5வது நிமிடத்தில் சென்செக்ஸ் பிரிவு பங்குகளின் விலை அதிகரித்தது. இதன் குறியீட்டு எண் 131.88 புள்ளிகள் அதிகரித்து சென்செக்ஸ் 19,532.55 புள்ளிகளைத் தொட்டது. பிறகு சென்செக்ஸ் இறங்குமுகமாக இருந்தது. மீண்டும் பங்குகளின் விலை ஏற்றத்தினால் காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 19,504.47 புள்ளிகளை தொட்டது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 103.80 புள்ளிகள் அதிகம் (நேற்றைய இறுதி நிலவரம் 19,400.67).
இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் நிஃப்டி குறியீடு 14.75 புள்ளிகள் அதிகரித்து 5,801.25 புள்ளிகளை தொட்டது. பிறகு நிப்டி பிரிவில் உள்ள பங்குகளின் விலை அதிகரித்ததால், குறியீட்டு எண் நிஃப்டியம் உயர்ந்தது. காலை 11 மணியளவில் நிப்டி 5,817.60 புள்ளிகளாக இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 31.15 புள்ளிகள் அதிகம்.
மும்பை பங்குச் சந்தையில் மற்ற பிரிவு குறியிட்டு எண்களும் நேற்றைய இறுதி நிலவரத்தை விட சுமார் 1 விழுக்காடு வரை குறைவாக உள்ளன்.
தேசிய பங்குச் சந்தையிலும் எல்லா பிரிவு குறீயீட்டு எண்களும் நேற்றைய இறுதி நிலவரத்தைவிட குறைவாக உள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகளில் பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், சிப்லா, கிராசிம், ஹெச்.டி.எப்.சி, ஹெச்.டி.எப்.சி.வங்கி, இன்போசியஸ், ரிலையன்ஸ் கம்யூனிகோஷன்ஸ், டாடா மோட்டார். டி.சி.எஸ், விப்ரோ, ஹூன்டால்கோ, என்.டி.பி.சி, ரிலையன்ஸ் எனர்ஜி, டி.சி.எஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை குறைந்து காணப்படுகிறது.
எல்.அண்ட்.டி, மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, ஒ.என்.ஜி.சி, ஏ.சி.சி, ஏ.சி.எல், பி.ஹெச்.இ.எல், டாடா ஸ்டீல்
ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலைகள் அதிகரித்து காணப்படுகிறது.