Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாலரின் மதிப்பில் மாற்றம் இல்லை!

டாலரின் மதிப்பில் மாற்றம் இல்லை!

Webdunia

, செவ்வாய், 6 நவம்பர் 2007 (19:48 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் டாலரின் மதிப்பு அதிக மாற்றம் இல்லாமல் முடிந்தது. இறுதியில் 1 டாலர் ரூ.39.30/31 என்ற அளவில் முடிந்தது.

காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு சரிந்தது. காலையில் 1 டாலர் ரூ.39.28/39.29 என்ற அளவில் தொடங்கியது. பிறகு 1 டாலர் ரூ.39.25 இல் இருந்து ரூ.39.32 வரை விற்பனையானது.

டாலரின் மதிப்பு சரியாமல் இருக்க ரிசர்வ் வங்கி தலையிட்டது. இதனால் இந்திய ரூபாய்க்கு நிதரான டாலரின் மதிப்பு அதிகளவு சரியாமல், நேற்றைய இறுதி நிலவரம் போலவே ரூ.39.30/39.31 என்ற அளவில் முடிந்தது.

இன்று ரிசர்வ் வங்கி 1 டாலர் ரூ.39.29 பைசா என நிர்ணயித்தது. இது நேற்று நிர்ணயித்து இருந்த விலையை விட 3 பைசா குறைவு. நேற்று ரிசர்வ் வங்கி நிர்ணயித்து இருந்த விலை ரூ.39.32.












Share this Story:

Follow Webdunia tamil