மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் (சென்செக்ஸ்) 385.45 புள்ளிகள் சரிந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையி (நிஃப்டி) 85.10 புள்ளிகள் சரிந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் ஒரு நிலையில் 19,502.45 புள்ளிகளாக சரிந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் அதிகபட்சமாக 5,948.55 புள்ளிகளாக உயர்ந்தது. குறைந்த பட்சமாக 5,819.60 புள்ளிகளாக இறங்கியது.
இன்று பங்குச் சந்தையில் எல்லா பிரிவு பங்குகளும் அதிகளவு விற்பனை செய்யப்பட்டன. அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை.
மற்ற பிரிவுகளில் மிட்கேப் 54.01 புள்ளிகளும், சுமால் கேப் 104.59 புள்ளிகளும் அதிகரித்தன. பி.எஸ்.இ 100- 131.11 புள்ளிகளும், பி.எஸ்.இ 100-200 புள்ளிகளும், பி.எஸ்.இ 500- 63.15 புள்ளிகளும் குறைந்தன.
தேசிய பங்குச் சந்தையில் நிப்டி ஜூனியர், மிட்கேப், மிட் கேப் 50 ஆகிய பிரிவுகளை தவிர மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்தன.