Newsworld Finance Market 0711 05 1071105052_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாலர் மதிப்பில் மாற்றமில்லை!

Advertiesment
அந்நியச் செலவாணி சந்தை இந்திய ரூபாய் டாலர் கச்சா எண்ணெய்
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் மாற்றமில்லை.

காலையில் அந்நியச் செலவாணி சந்தையில் வர்த்தகம் தொடங்கிய போது டாலரின் மதிப்பு 7 பைசா குறைந்தது. 1 டாலர் ரூ.39.23 முதல் ரூ.39.40 வரை விற்பனையானது. இது வெள்ளிக்கிழமை இறுதி நிலவரத்தை விட 7 பைசா குறைவு.
பெட்ரோலிய நிறுவனங்கள், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான பணத்தை பட்டுவாடா செய்ய டாலரை வாங்கின.

அத்துடன் பங்குச் சந்தையின் சரிவு, ஆசிய நாடுகளின் மற்ற பங்குச் சந்தைகளின் சரிவின் பிரதிபலிப்பு அந்நியச் செலவாணி சந்தையிலும் காணப்பட்டது.

இன்று ரிசர்வ் வங்கி 1 டாலர் ரூ.39.32 என்று விலையை நிர்ணயித்தது. இது சென்ற வெள்ளிக் கிழமையை விட 5 பைசா அதிகம். ரிசர்வ் வங்கி வெள்ளிக் கிழமை 1 டாலர் ரூ.39.37 என்று விலை நிர்ணயித்திருந்தது.








Share this Story:

Follow Webdunia tamil