Publish Date: Mon, 05 Nov 2007 (13:43 IST)
Updated Date: Mon, 05 Nov 2007 (13:42 IST)
வங்கிகளுக்கு இடையிலான் அந்நியச் செலவாணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்தது.
அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கியபோது ரூபாயின் மதிப்பு வெள்ளிக் கிழமையை விட 6 பைசா குறைந்தது. காலையில் 1 டாலர் ரூ.39.37 / 39.39 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தைவிட 6 பைசா குறைவு. (வெள்ளிக் கிழமை இறுதி நிலலவரம் ரூ.39.31 / 39.32).
பிறகு ரூபாயின் மதிப்பு சிறிது உயர்ந்து காலை 12 மணியளளவில் 1 டாலர் ரூ.39.34 / 39.35 என்ற அளவில் விற்பனையானது.
இன்று அந்நியச் செலவாணி சந்தையில் பெட்ரோலிய நிறுவனங்கள் டாலரா வாங்கின. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 95 டாலர் என்ற அளவில் இருக்கின்றது. (இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள் வாங்கும் கச்சா எண்ணெயின் விலை, இதை விட சுமார் 10 டாலர் குறைவாக இருக்கும்)
ஆசிய பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் சரிவினாலும், இதன் பிரதிபலிப்பாக இந்திய பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் குறைந்ததால், டாலரின் மதிப்பு அதிகரித்ததாக அந்நியச் செலவாணி வர்த்தகர்கள் கருதுகின்றனர்.
Webdunia
Publish Date: Mon, 05 Nov 2007 (13:43 IST)
Updated Date: Mon, 05 Nov 2007 (13:42 IST)