இன்று காலையில் இருந்தே மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் பிரிவு, தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி பிரிவு பங்குகளின் விலை அடிக்கடி மாறிக் கொண்டே உள்ளது. இதனால் இவைகளின் குறியீட்டு எண்களிலும் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மாற்றம் எற்பட வாய்ப்பு இருப்பதாக புரோக்கர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மும்பை பங்குச் சந்தையில் காலை பங்கு வர்த்தகம் தொடங்கியிதில் இருந்தே
சென்செக்ஸ் குறியீட்டு எண் குறைந்தது. காலை வர்த்தகம் தொடங்கிய
ஐந்தாவது நிமிடத்தில் சென்செக்ஸ் 19,800 புள்ளிகளாக சரிந்தது. இது வெள்ளிக்கிழமை இறுதி நிலவரத்தை விட 176.23 புள்ளிகள் குறைவு. பிறகு சிறுது முன்னேறி 11.30 மணியளவில் சென்செக்ஸ் 19,926.18 புள்ளிகளாக இருக்கின்றது. இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 50 புள்ளிகள் குறைவு. (வெள்ளிக் கிழமை இறுதி நிலவரம் 19,976.23 புள்ளிகள்).
அதே நேரத்தில் மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மிட் கேப் 119.13 ; சுமால் கேப் 194.05 ;
பி.எஸ்.இ 100 - 45.69 ; பி.எஸ்.இ 200 - 13.27 : பி.எஸ்.இ 500 - 54.24 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் காலையில் முதல் 5 நிமிடத்தில் நிஃப்டி குறியீட்டு எண் 5,896.50 புள்ளிகளாக இருந்தது. இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 35.90 புள்ளிகள் குறைவு. காலை 11.20 மணியளவில் நிஃப்டி அதிகரிக்க துவங்கியது. 11.30 மணியளவில் நிப்டி 5,943.90 புள்ளிகளாக அதிகரித்தது. இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தைவிட 11.50 புள்ளிகள் உயர்வு.
சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் ஏ.சி.சி, ஏ.சி.எல், பஜாஜ் ஆட்டோ, பி.ஹெச்.இ.எல், டாக்டர் ரெட்டி, கிராசிம், ஹெச்.டி.எப்.சி, ஹெச்.டி.எப்.சி வங்கி, ஹுந்துஸ்தான் யூனிலிவர், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இன்போசியஸ், ஐ.டி.சி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, ஒ.என்.ஜி.சி, ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.
பார்தி ஏர்டெல், சிப்லா, ஹூன்டால்கோ, எல். அண்ட். டி, மாருதி, ரான்பாக்ஸி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.
ஐப்பான் பங்குச் சந்தை, சிங்கப்பூர், தென் கெரியா ஆகிய நாட்டு பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண் குறைந்தது.
அதே நேரத்தில் தைவான், ஹாங்காங் பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.