மும்பை பங்குச் சந்தையில் இன்று சென்செக்ஸ் 54.48 புள்ளிகள் அதிகரித்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் நிஃப்டி 32 புள்ளிகள் அதிகரித்தது.
காலையில் பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கியவுடன், நேற்றை விட சிறிது அதிகமாக சென்செக்ஸ் 19,827.40 புள்ளிகளாக இருந்தது. ஒரு நிலையில் 19,984.13 புள்ளிகளாக உயர்ந்தும், 19,735 புள்ளிகளாக குறைந்தும் காணப்பட்டது.
இன்று மாலை இறுதியில் சென்செக்ஸ் 19,837.99 புள்ளிகளாக முடிந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தைவிட 54.48 புள்ளிகள் அதிகம்.
மும்பை பங்குச் சந்தையின் மற்ற பிரிவுகளான மிட் கேப் 87.14 புள்ளிகளும், சுமால் கேப் 152.42 புள்ளிகளும், பி.எஸ்.இ. 100- 55.90 புள்ளிகளும், பி.எஸ்.இ. 200- 13.09 புள்ளிகளும், பி.எஸ்.இ.500 - 51.56 புள்ளிகளும் அதிகரித்தது. தேசிய பங்குச் சந்தையிலும் தகவல் தொழில் நுட்ப நிறுவன பிரிவு தவிர, மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள ஏ.சி.எல், பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டி, ஹெச்.டி.எப்.சி, ஹெச்.டி.எப்.சி வங்கி, ஹூன்டால்கோ, ஐ.சி.ஐ,சி.ஐ வங்கி, என்.டி.பி.சி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், எஸ்.பி.ஐ, ஏ.சி.சி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்து.
எல். அண்ட்.டி, மாருதி, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், விப்ரோ, பஜாஜ் ஆட்டோ, பி.ஹெச்.இ.எல், சிப்லா, ஹிந்துஸ்தான் யூனிலிவர், இன்போசியஸ், ஐ.டி.சி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.