Newsworld Finance Market 0710 30 1071030040_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தைகளில் இறக்கம்!

Advertiesment
சென்செக்ஸ் மும்பை பங்குச் சந்தை நிஃப்டி

Webdunia

, செவ்வாய், 30 அக்டோபர் 2007 (19:38 IST)
மும்பை பங்குச் சந்தையில் இன்று சென்செக்ஸ் 20,238 புள்ளிகளாக அதிகரித்து, இறுதியில் 19,783.51 புள்ளிகளில் முடிந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 194.16 புள்ளிகள் குறைவு (நேற்றைய இறுதி நிலவரம் 19,977.67 ).

நேற்று முதன் முறையாக சென்செக்ஸ் 20 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது. அந்த மகிழ்ச்சி ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. மீண்டும் 20 ஆயிரத்திற்கும் கீழ் சென்செக்ஸ் குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மற்ற பிரிவுகளான மிட் கேப் 34.37 புள்ளிகள், சுமால் கேப் 60.76 புள்ளிகள், பி.எஸ்.இ 100 14.45 புள்ளிகள், பி.எஸ்.இ 200 4.24 புள்ளிகள், பி.எஸ்.இ. 500 13.39 புள்ளிகள் குறைந்தன.

இதேபோல தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 37.15 புள்ளிகள் குறைந்தன. தேசிய பங்குச் சந்தையிலும் நிஃப்டி ஜூனியர் தவிர மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்தன.

இன்று ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஹெச்.டி.எப்.சி வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி கிரேசம், இன்போசியஸ், ஐ.டி.சி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, டான்பாக்ஸி, ஒ.என்.ஜி.சி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், சத்யம், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், டாடா மோட்டார், டாடா ஸ்டீல், டி.சி. எஸ், ஏ.சி.எஸ், பஜாஜ் ஆட்டோ, சிப்லா ஆகியவற்றின் பங்கு விலை குறைந்தது.

விப்ரோ, ஏ.சி,எல், பார்தி ஏர்டெல், டாக்டர் ரெட்டி, எல் அண்ட் டி, இன்போசியஸ், பி.ஹெச். இ.எல். அகியவற்றின் பங்குகள் விலை அதிகரித்தது.


Share this Story:

Follow Webdunia tamil