இது வரை இல்லாத அளவிற்கு தங்கம் விலை அதிகரித்ததுள்ளது.
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.100- ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.235 அதிகரித்தது.
காலையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.19 ஆயிரத்தை தாண்டி ரூ.19,215 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியது. பிறகு கிலோவுக்கு ரூ 5 குறைந்து, இறுதியில் பார் வெள்ளி கிலோ ரூ.19,210 என்ற அளவில் முடிந்தது. இது சனிக்கிழமை இறுதி விலையை விட ரூ.235 உயர்வாகும்.
இந்தியாவில் மட்டுமல்லாது நியூயார்க், லண்டன் சந்தைகளிலும் வெள்ளி விலை அதிகரித்தது. இங்கு வெள்ளிக்கிழமை 1 அவுன்ஸ் (23.8 கிராம்) 14.04 / 14.10 டாலராக இருந்தது. இன்று 1 அவுன்ஸ் 14.38/14.40 டாலராக அதிகரித்தது.
காலையில் 24 காரட், 22 காரட் தங்கத்தின் விலை அதிகரித்தது. 24 காரட் 10 கிராம் ரூ.10,180 என்ற அளவிலும், 22 காரட் 10 கிராம் ரூ.10,130 என்ற விலையில் வர்த்தகம் தொடங்கியது.
இறுதியில் நேற்றைய விலையை விட 24 காரட் 10 கிராமுக்கு ரூ.100 - ம், 22 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.95 ஆகவும் அதிகரித்தது.
இதற்கு காரணம் அந்நிய நாட்டு சந்தையில் இருந்து வந்த தகவல்களும், வர்த்தகர்கள் அதிகளவு விற்பனைக்கு கொண்டு வராததே காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
நியூயார்க், லண்டன் சந்தையிலும் வெள்ளிக் கிழமை இறுதி விலையை விட தங்கத்தின் விலை அதிகரித்தது. (769.25 / 772.00) இன்றைய இறுதி விலை 1 அவுன்ஸ் 786.50 / 790.00 டாலர்கள்.
இறுதி விலை நிலவரம்
தங்கம் 24 காரட் 10 கிராம் ரூ.10,185 (நேற்று ரூ.10,085)
தங்கம் 22 காரட் 10 கிராம் ரூ.10,135 (ரூ 10,040)
பார் வெள்ளி கிலோ ரூ.19,210 (ரூ. 18,975)