Newsworld Finance Market 0710 29 1071029041_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை பங்குச் சந்தைக் குறியீடு 734 புள்ளிகள் உயர்வு!

Advertiesment
சென்செக்ஸ் மும்பை பங்குச் சந்தை

Webdunia

, திங்கள், 29 அக்டோபர் 2007 (20:20 IST)
மும்பை பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிகளவு பங்குகளை வாங்கியதால், காலையில் தொடக்கத்தில் இருந்து பங்குச் சந்தை சுறு சுறுப்பாகத் துவங்கியது.

மதிய இடைவேளைக்கு மேல் சென்செக்ஸ் 20 ஆயிரத்தை தாண்டி 20,024.87 புள்ளிகளைத் தொட்டது.

காலையில் வர்த்தகம் தொடங்கிய ஐந்து நிமிடத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீடு (சென்செக்ஸ்) வெள்ளிக் கிழமையை விட 400 புள்ளிகள் அதிகமாக 19,621.39 புள்ளிகளில் தொடங்கியது. (வெள்ளிக் கிழமை இறுதி நிலவரம் 19,243.17).

கடந்த பத்து நாட்களில் மட்டும் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் அதிகரித்துள்ளது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிப்டியும் காலையிலிருந்தே அதிகரித்தது. இறுதியில் 203.60 புள்ளிகள் அதிகரித்து 5,905.90 புள்ளிகளில் முடிந்தது. (வெள்ளிக் கிழமை இறுதி நிலவரம் 5702.30).

அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பிலும், இந்திய ரிசர்வ் வங்கி நாளை பொருளாதார கொள்கையை அறிவிக்க இருப்பதாலும் அந்நிய நிறுவனங்கள் அதிகளவு முதலீடு செய்தன.

சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் 24 நிறுவன பங்குகளின் விலை அதிகரித்தது. இன்று ரொக்க பிரிவில் ரூ.8,884 கோடிக்கு பங்குகள் பரிமாற்றம் நடந்தன. சென்ற வெள்ளிக்கிழமை ரூ.9,005.17 கோடிக்கு பங்கு பரிமாற்றம் நடந்தது.

மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.











Share this Story:

Follow Webdunia tamil