மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்தது.
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று காலை பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.245-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.85 -ம் அதிகரித்தது.
சர்வேதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை அதிகரிப்பு, வெளிநாட்டு சந்தையில் இருந்து வந்த தகவல்கள், பண்டிகை காலத்தை ஒட்டி தங்க நகை தயாரிப்பாளர்கள் அதிகளவு தங்கம் வாங்கியதால் விலை அதிகரித்தது. இதே போல் தொழில் துறையினர் வெள்ளியை வாங்கியதால் வெள்ளி விலை அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
கடந்த வியாளக்கிழமையில் இருந்து தினசரி தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தினசரி அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை விலை நிலவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.10,180
தங்கம் (22 காரட்) 10 கிராம் ரூ.10,130
வெள்ளி (பார்) 1 கிலோ ரூ.19,215