Publish Date: Mon, 29 Oct 2007 (10:22 IST)
Updated Date: Mon, 29 Oct 2007 (10:22 IST)
மழை காரணமாக விளைச்சல் குறைந்துள்ளதால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் காய் கறிகளின் விளைச்சல் குறைந்துள்ளது. கோலார், மங்களூர் ஆகிய இடங்களில் இருந்து வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.9 விற்ற நாட்டு தக்காளி தற்போது ரூ.11 விலை உயர்ந்து ரூ.20 க்கு விற்கப்படுகிறது. இதேபோல் பெங்களூர் தக்காளியும் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ. 10க்கு விற்பனை செய்யப்பட்ட பெங்களூர் தக்காளி தற்போது ரூ.18 க்கு விற்கப்படுகிறது.
மழை காரணமாக திண்டுக்கல் மாவட்டம் தேனியில் இருந்து காய்கறி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. இதே மழை தொடர்ந்து நீடித்தால் காய்கறி விலை கடுமையாக உயரும் என்று காய்கறி சங்கத் தலைவர் செளந்தரராஜன் கூறினார்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்கப்படும் காய்கறி விலைகள் (ஒரு கிலோ) வருமாறு:
நாசிக் வெங்காயம் ரூ.20
பெரிய வெங்காயம் ரூ.18
சாம்பார் வெங்காயம் ரூ.22
கத்தரிக்காய் ரூ.06
வெண்டைக்காய் ரூ.07
பீன்ஸ் ரூ.16
புடலங்காய் ரூ.07
ஊட்டி கேரட் ரூ.08
பெங்களூர் கேரட் ரூ.10
நாட்டு தக்காளி ரூ.20
பெங்களூர் தக்காளி ரூ.18
உருளைக்கிழங்கு ரூ.14
சேனைக் கிழங்கு ரூ.07
கோஸ் ரூ.05
பாகற்காய் ரூ.10
முள்ளங்கி ரூ.07
பீட்ரூட் ரூ.05
அவரைக்காய் ரூ.16
கோவக்காய் ரூ.05
சுரக்காய் ரூ.04
பார்கர்காய் ரூ.12
மிளகாய் ரூ.08
இஞ்சி ரூ.25
முருங்கக்காய் ரூ.20
வெள்ளரிக்காய் ரூ.04
பூசணி ரூ.03
சவ்சவ் ரூ.08
நுனுகோல் ரூ.06
பரங்கிகாய் ரூ.03
பட்டாணி ரூ.40
பழ வகைகள் (ஒரு கிலோ)
ஆப்பிள் ரூ.68
ஆரஞ்சு ரூ.36-52
சாத்துக்குடி ரூ.20
கொய்யா ரூ.18
க.திராட்சை ரூ.40
ப.திராட்சை ரூ.46
மாதுளை ரூ.30-40
சீத்தா ரூ.20
பப்பாளி ரூ.16
சப்போட்டா ரூ.30
கிரினி பழம் ரூ.20
தர்பூசணி ரூ.12
Webdunia
Publish Date: Mon, 29 Oct 2007 (10:22 IST)
Updated Date: Mon, 29 Oct 2007 (10:22 IST)