வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா அதிகரித்தது.
காலையில் ரூபாயின் மதிப்பு 6 பைசா குறைந்தது. பிறகு 12 மணியளவில் ரூபாயின் மதிப்பு உயர துவங்கியது.
பங்குச் சந்தையில் அந்நிய மூதலீட்டு நிறுவனங்களின் முதலீடு அதிகளவு இருந்து, குறியீட்டு எண் 19 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது.
இதனால் டாலர் அதிகளவு விற்பனைக்கு வந்ததால், டாலரின் மதிப்பு குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.