Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தை 19,000 புள்ளிகளை எட்டும்?

பங்குச் சந்தை 19,000 புள்ளிகளை எட்டும்?

Webdunia

, வியாழன், 25 அக்டோபர் 2007 (17:59 IST)
மும்பை பங்குச் சந்தையில் காலை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 100 புள்ளிகள் அதிகரித்தது.

அதற்கு பின் சென்செக்ஸ் பிரிவுகளிலும் மற்ற பிரிவுகளிலும் உள்ள பங்குகளின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் இதன் குறியீட்டு எண்களும் ஏறுமுகமாக உள்ளது.

காலை 12 மணியளவில் நேற்றைய இறுதி நிலவரத்தை விட சென்செக்ஸ் 139.75 புள்ளிகள் அதிகரித்து 18,652.66 என்ற நிலையி்ல இருந்தது. (நேற்றைய இறுதி நிலவரம் 18512.91) இதே போல் மிட்கேப் 125.41 புள்ளிகள், சுமால் கேப் 148.39 புள்ளிகளும் அதிகரித்தது. மற்ற பிரிவுகளான பி.எஸ்.இ 100, 200, 500 பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிப்டி பிரிவில் காலையில் முதல் அரை மணி நேரம் பங்குகளின் விலை ஏற்ற இறக்கமாக இருந்தது. அதனால் நிப்டி குறியீட்டு எண்ணும் தடுமாற்றமாக இருந்தது.

ஆனால் காலை 10.30 மணிக்கு பிறகு நிப்டி, நேற்றைய இறுதி நிலவரத்தை விட அதிகரிக்க தொடங்கியது. காலையில் 12 மணியளவில் நிப்டி 28.15 புள்ளிகள் அதிகரித்து 5523.90 என்ற நிலையில் இருந்தது. (நேற்றைய இறுதி நிலவரம் 5495.15). தேசிய பங்குச் சந்தையில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் பிரிவு தவிர, மற்ற பிரிவு பங்குகளின் குறியீட்டு எண் அதிகரித்தது.

சென்செக்ஸ் பிரிவு பங்குகளில் பி.ஹெச்.இ.எல், கிரேசம், ஹூன்டால்கோ, ஐ.ி.ஐ.ிச.ஐ வங்கி, எல். அண்ட் டி, மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ரிலையன்ஸ் எனர்ஜி, டாடா மோட்டார், எஸ்.ி.ஐ, டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, பாரிதி ஏர்டெல்,


சென்செக்ஸ் பிரிவில் ஐ.ி.ி, என்.ி.ி.ி, ஒ.என்.ி.ி, ரான்பாக்ஸி, விப்ரோ, ஏ.ி.ி, ஏ.ி.எல், சிப்லா, டாக்டர் ரெட்டி, ஹெச்.ி.எப்.ி., ஹெச்.ி.எப்.சி வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலிவர், இன்போசியஸ், ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் விலை குறைந்தது.

இன்று மாலையில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 19,000 ஆயிரத்தை தாண்டிவிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அந்நிய முசலீட்டு நிறுவனங்களின் வாயிலாக பார்சிபட்டரி நோட் எனப்படும் பங்கேற்பு பத்திரங்கள் மூலமாக, பங்குச் சந்தையி்ல் முதலீடு செய்யும் அந்நிய நாட்டை சேர்ந்த தனிநபர்கள், நிதி நிறுவனங்களுக்கு கட்டுப்படாடுகளை விதிக்க பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியம் செபி முடிவு செய்துள்ளது.

இதற்கான அறிவிப்பை சென்ற செவ்வாய் கிழமை அறிவித்தது.

இதில் இறுதி முடிவு எடுப்பதற்காக செபி இயக்குநர்களின் கூட்டம் இன்று காலையில் நடக்கிறது. இதில் அந்நிய மூதலீட்டு நிறுவனங்களை பாதிக்கும் வகையில், பெரிய அளவு கட்டுப்பாடு இருக்காது என்று தெரிகிறது.

இதனால் பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் அதிகரிக்கின்றன.















Share this Story:

Follow Webdunia tamil