வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை டாலரின் மதிப்பு குறைந்தது. 1 டாலர் ரூ.39.51/53 வரை விற்பனையானது. நேற்றைய இறுதி நிலவரம் 1 டாலர்ரூ. 39.60.
பிறகு காலை வர்த்தக நேரத்தில் 1 டாலர் ரூ.39.47 முதல் ரூ.39.53 வரை விற்பனையானது.
இன்று காலையில் கடந்த ஒன்பதரை ஆணடுகளில் அதிகபட்சமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தது. கடந்த சில நாட்களாக பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்களை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட விதிமுறைகள் கடுமையாக இருக்காது என்பதால், அதிகளவு அந்நிய மூதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்தன. இதனால் அதிகளவு டாலர் வந்தது. இதுவே டாலரின் மதிப்பு குறைந்ததற்கு காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.