Publish Date: Tue, 23 Oct 2007 (20:26 IST)
Updated Date: Tue, 23 Oct 2007 (20:25 IST)
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் தங்கம் மற்றம் வெள்ளியின் விலை அதிகரித்தது.
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 அதிகரித்தது. பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.100 உயர்ந்தது.
தங்க நகை உற்பத்தியாளர்கள் தங்கம் வாங்குவதற்கு ஆர்வம் காட்டினார்கள். அதே போல் தொழில் துறையினர் வெள்ளி வாங்கினார்கள். அத்துடன் வெளிநாட்டு சந்தைகளில் இருந்து வந்த தகவல்களாலும் விலைகள் அதிகரித்தன.
தீபாவளி அதைத் தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் நகை விற்பனை அதிகரிக்கும்,. இதனால் தங்கத்தின் விலை அதிகரிக்கின்றது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
லண்டன் சந்தையில் தங்கத்தின் விலை 1 அவுன்சுக்கு 2.75 டாலர் அதிகரித்தது.
இறுதி விலை நிலவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.9,860
தங்கம் (22 காரட்) 10 கிராம் ரூ.9,710
பார் வெள்ளி கிலோ ரூ.18,150