Publish Date: Fri, 19 Oct 2007 (20:21 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:32 IST)
தங்கம் வெள்ளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.35ம், பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.135ம் அதிகரித்தது.
வெள்ளியை தொழில் துறையினர் அதிகளவு வாங்கியதால் காலையில் பார் வெள்ளி கிலோ ரூ. 18,540 என வர்த்தகம் தொடங்கியது. இது நேற்றைய இறுதி விலையை விட 105 அதிகம். இறுதியில் பார் வெள்ளி கிலோ ரூ. 18,570 ஆக முடிவுற்றது. இது நேற்றைய இறுதி விலையை விட ரூ. 135 அதிகம்.
இறுதி விலை நிலவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.9,965 (நேற்று 9,830 )
தங்கம் (22 காரட்) 10 கிராம் ரூ. 9915 (9,780 )
பார் வெள்ளி கிலோ ரூ.18,570 ( 18,435)