Publish Date: Fri, 19 Oct 2007 (15:53 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:32 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.105-ம், 24 காரட் தங்கம 10 கிராமுக்கு ரூ.135-ம் அதிகரித்தது.
டோக்கியோ தங்கம் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்தது. துருக்கிக்கும் ஈராக்கிறும் இடையே பதற்றம் நிலவுவதால், டாலரை விற்று விட்டு தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. இதனால் டாலரின் மதிப்பு குறைந்து வருகிறது.
டோக்கியோவில் 1 அவுன்ஸ் 769.60 டாலராக அதிகரித்தது. இங்கு கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை உச்ச கட்டத்தை அடைந்தது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இதே போல் நியூயார்க் சந்தையிலும் தங்கம், வெள்ளியின் விலை அதிகரித்தது.
இன்று காலை விலை நிலவரம்.
காலை விலை நிலவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.9, 965
தங்கம் (22 காரட்) 10 கிராம் ரூ.9, 915
வெள்ளி (பார்) 1 கிலோ ரூ.18,540
Webdunia
Publish Date: Fri, 19 Oct 2007 (15:53 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:32 IST)