Publish Date: Fri, 19 Oct 2007 (15:34 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:32 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 பைசா அதிகரித்தது.
இன்று காலை 1 டாலர் ரூ 39.72/74 என்ற விலையில் வர்த்தகம் நடந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 5 பைசா குறைவு. நேற்றைய இறுதி நிலவரம் 39.77/78.
கடந்த சில வாரங்களாக பங்குச் சந்தையில், அதிகளவு அந்நிய மூதலீட்டு நிறுவனங்கள் மூதலீடு செய்து வருகின்றன. இதனால் டாலர் வரத்து அதிகிளவு உள்ளது.
சென்ற இரண்டு தினங்களில் பங்குச் சந்தையில் நிலவும் சூழ்நிலையால் அடுத்த வாரம் அந்நிய மூதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது தொடருமா அல்லது பங்குகளை விற்று விட்டு முதலீட்டை மற்ற நாடுகளுக்கு இடம் பெயர்வார்களா என்று தெரியவரும்.
இதை பொறுத்து இந்திய ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பில் மாற்றம் இருக்கும்.
Webdunia
Publish Date: Fri, 19 Oct 2007 (15:34 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:32 IST)