வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 பைசா குறைந்தது.
இன்று காலையில் 1 டாலர் ரூ. 39.44/45 என்று வர்த்தகம் தொடங்கியது. மாலையில் 1 டாலர் ரூ. 39.77/78 என்று முடிந்தது. இது நேற்று விலையுடன் ஒப்பிடுகையில் 22 பைசா குறைவு. நேற்றைய விலை ரூ. 39.55/56.
பங்குச் சந்தையில் நிலவும் பங்குகளின் விலை ஏற்ற இறக்கத்தால் அந்நியச் செலவாணிச் சந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மாறுபடுவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
பங்குளின் விலை குறைந்து குறியீடு எண் அதிகரிக்கும் போது, அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிகளவு முதலீடு செய்கின்றனர். இதனால் அதிகளவு டாலர் வரத்து இருப்பதால் ரூபாயின் மதிப்பு அதிகரிக்கின்றது. இதே போல் குறியீடு எண் குறையும் போது டாலர் நாட்டை விட்டு வெளியேறும் போது ரூபாயின் மதிப்பு குறைகின்றது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.