Publish Date: Fri, 12 Oct 2007 (20:13 IST)
Updated Date: Fri, 12 Oct 2007 (20:13 IST)
தங்கம் வெள்ளியின் விலை இன்று மூன்றாவது நாளாக அதிகரித்தது. பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.120-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.15 அதிகரித்தது.
அந்நிய தங்கம் வெள்ளி சந்தைகளில் இருந்து வந்த தகவல்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மேலும் அதிகரிக்கும் என்று வர்த்தகர்கள் அதிகளவு விற்பனை செய்யவில்லை.
பார் வெள்ளியின் விலை கடந்த மூன்று நாட்களில் கிலோவுக்கு ரூ.425 உயர்ந்துள்ளது.
இறுதி விலை நிலவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.9,590 (நேற்று 9,575)
தங்கம் (22 காரட்) 10 கிராம் ரூ.9,540 (9,525 )
பார் வெள்ளி கிலோ ரூ 18,,280 (18,160)