மும்பை பங்குச் சந்தையும், தேசிய பங்குச் சந்தையும் விறுவிறுப்பாக உள்ளது. இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், நேற்றைய இறுதி நிலவரத்தை விட 370.13 புள்ளிகள் அதிகரித்தது. சென்செக்ஸ் குறியீட்டு எண் 18,650.37 புள்ளிகளை தொட்டது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி நேற்றைய இறுதி நிலவரத்தை விட 123.80 புள்ளிகள் அதிகரித்தது. நிப்டி குறியீட்டு எண் 5,451.05 புள்ளிகளை தொட்டது.
அதற்கு பிறகு பங்குளின் விலை குறைந்தும் அதிகரித்தும் காணப்பட்டது. காலை 11.15 மணியளவில் மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 15,537.34 புள்ளிகளாக இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 252.10 புள்ளிகள் அதிகம். தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் 5,397.95 புள்ளிகளாக உள்ளது. இது நேற்றைய நிலவரத்தை விட 70 புள்ளிகள் அதிகம்.
இன்று காலையில் ரிலையன்ஸ் இன்டஸ்டரிஸ், பர்தி ஏர்டெல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏ.சி.சி, பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ், ரிலையன்ஸ் எனர்ஜி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.
ஐ.டி.சி, ஹிந்துஸ்தான் யூனிலிவர், மாருதி சுஜூகி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தது.
ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களான டி.எல்.எப், இந்தியா புல்ஸ் ரியல் எஸ்டேட். யூனிடெக் ஆகியவற்றின் பங்கு விலை அதிகரித்தது.
ஆசிய நாடுகளின் பங்குச் சந்தையிலும் குறியீட்டு எண் அதிகரித்தது. ஹாங்காங் பங்குச் சந்தை குறியீட்டு எண் ஹாங் செங் 1.34 விழுக்காடும், சிங்கப்பூர் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 0.14 விழுக்காடும், ஜப்பானின் நிக்கி 0.21 விழுக்காடும், கொரியாவின் சியோல் 1.05 விழுக்காடும் அதிகரித்ததாக புரோக்கர்கள் தெரிவித்தனர்.