ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் கன மழை காரணமாக வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு வெங்காயம் வரத்து குறைந்து வருவதால் விலை அதிகரித்துள்ளது. ரூ.18 க்கு விற்ற வெங்காயம் ரூ.5 உயர்ந்து 23 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெங்காயம் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் கன மழை பெய்து வருவதால் விளைச்சல் இல்லாமல் வெங்காயம் அழுகி கிடக்கிறது. இதனை நாங்கள் நேரில் சென்று பார்த்து வந்துள்ளோம் என்று காய் கறிகள் வியாபாரிகள் சங்கத் தலைவர் செளந்திரபாண்டியன் கூறினார்.
கர்நாடகாவில் இருந்து வரும் வெங்காயம் அனைத்தும் தேசம் அடைந்து வருகிறது. இதனை விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. மழை மற்றும் சேதத்தால் வெங்காயம் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது என்றார் செளந்திரபாண்டியன்.
இதேபோல் கிலோ ரூ.7க்கு விற்க தக்காளி தற்போது ரூ.12க்கு விற்கப்படுகிறது. முருங்கைக்காய் கிலோவிற்கு ரூ. 10 உயர்ந்து தற்போது ரூ.20க்கு விற்கப்படுகிறது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் விற்கப்படும் காய்கறி விலைகள் (ஒரு கிலோ) வருமாறு:
பெரிய வெங்காயம் ரூ.23
சாம்பார் வெங்காயம் ரூ.14
கத்தரிக்காய் ரூ.07
வெண்டைக்காய் ரூ.10
பீன்ஸ் ரூ.18
புடலங்காய் ரூ.09
ஊட்டி கேரட் ரூ.16
பெங்களூர் கேரட் ரூ.12
நாட்டு தக்காளி ரூ.12
பெங்களூர் தக்காளி ரூ.12
உருளைக்கிழங்கு ரூ.13
சேனைக் கிழங்கு ரூ.09
கோஸ் ரூ.06
பாகற்காய் ரூ.10
முள்ளங்கி ரூ.07
பீட்ரூட் ரூ.08
அவரைக்காய் ரூ.16
மிளகாய் ரூ.09
இஞ்சி ரூ.28-35
முருங்கக்காய் ரூ.20
பூசணி ரூ.05
சவ்சவ் ரூ.08
பட்டாணி ரூ.40
பழ வகைகள்
ஆப்பிள் கிலோ ரூ.60
ஆரஞ்சு ,, ரூ.35 முதல் 70 வரை
சாத்துக்குடி ,, ரூ.20
கொய்யா ,, ரூ.22
க.திராட்சை ,, ரூ.40
ப.திராட்சை ,, ரூ.40
மாதுளை ,, ரூ.50
சீத்தா ,, ரூ.20
பப்பாளி ,, ரூ.15