தங்கத்தின் விலை 10 கிராமுக்கு பத்து ரூபாய் அதிகரித்தது. இதே போல் வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ 80 அதிகரித்தது. கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவு இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்தது.
இந்த விலை உயர்வுக்கு காரணம் அயல்நாடுகளில் இருந்தும், உள்நாட்டில் மற்ற நகரங்களில் இருந்து வந்த தகவல்கள் தான் என்று மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.
இன்று காலையில் தொழில் துறையினர் வெள்ளி வாங்குவதில் ஆர்வம் காண்பித்தனர். இதனால் காலையிலேயே கிலோ ரூ.18,395 க்கு விற்பனை செய்யப்பட்டது. பிறகு விலை உயர்ந்து இறுதியாக ரூ.18,400 என்ற அளவில் முடிந்தது. இது இதற்கு முந்தைய தினத்தின் விலையை விட ரூ.80 உ.யர்வு.
இதே போல் தங்கம் விற்பனைக்கு குறைவான அளவே வந்ததால், 24 காரட் 10 கிராம் ரூ.9,655, 22 கார்ட் 10 கிராம் ரூ.9,605 என்ற அளவில் முடிந்தது. இது சனிக்கிழமை விலையை விட கிராமுக்கு ரூ, 10 அதிகம்.
இறுதி விலை விபரம்
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.9,655 (9,645)
தங்கம் (22 காரட்) 10 கிராம் ரூ.9,605 (9,595)
வெள்ளி (பார்) 1 கிலோ ரூ.18,400 (18,320)