Publish Date: Mon, 01 Oct 2007 (18:09 IST)
Updated Date: Mon, 01 Oct 2007 (17:57 IST)
இன்று அந்நியச் செலாவணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு எதிரான டாலர் மதிப்பில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.
காலையில் வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் 1 டாலர் ரூ.39.75/76 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியது. இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 5 பைசா அதிகம்.
காலையில் டாலர் மதிப்பு சரியாமல் இருக்க, ரிசர்வ் வங்கி தலையிட்டது. குறிப்பாக பாரத ஸ்டேட் வங்கி அதிகளவு டாலரை சந்தையில் இருந்து வாங்கியது. டாலரின் மதிப்பு குறையாமல் இருப்பதற்காக, ரிசர்வ் வங்கி தொடர்ந்து தலையிட்டு, அதிகப்படியாக உள்ள டாலரை வாங்குவதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.