அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு 10 பைசா அதிகரித்தது.
அந்நியச் செலாவணி சந்தையில் இந்திய ரூபாய்க்கு எதிரான டாலரின் மதிப்பு சரிவதை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டது. இதனால் டாலரின் மதிப்பு அதிகரித்தது.
காலையில் 1 டாலரின் விலை ரூ. 39.69/70 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியது. பங்குச் சந்தையில் அந்நிய நேரடி மூதலீட்டு நிறுவனங்கள், இன்றும் அதிகளவு முதலீடு செயதனர்.
அதனால் டாலர் அதிகளவு வந்து குவிந்தது. டாலரின் மதிப்பு சிறிது குறைந்தது.
இதனை தடுத்து நிறுத்த ரிசர்வ் வங்கி தொடர்ந்து தலையிட்டு டாலர் வாங்கியது. இதனால் டாலரின் மதிப்பு அதிகரித்து, ஒரு நேரத்தி்ல 1 டாலர் ரூ.39.84 என்ற அளவில் இருந்தது.
ரிசர்வ் வங்கி தொடர்ந்து சந்தையில் ஈடுபட்டு, ரூபாயின் மதிப்பை குறைக்கும். இதனால் டாலர் மதிப்பு அதிகரித்து, அடுத்த வாரத்தில் 1 டாலர் ரூ 40.20 என்ற அளவு வரும் வரை ரிசர்வ் வங்கியின் தலையீடு இருக்கும் என்று கார்ப்பரேசன் வங்கியைச் சேர்ந்து மூத்த அதிகாரி சுதர்சன் பத் தெரிவித்தார்.
இறுதியி்ல 1 டாலர் ரூ.39.70/71 என்ற அளவில் முடிவடைந்தது.