மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் 34 புள்ளிகள் குறைந்தது.
இதற்கு முக்கிய காரணம் ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், டாடா கன்சல்டன்சி நிறுவன பங்குகள் விற்கும் போக்கு காணப்பட்டதே.
நேற்று மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் 25.20 புள்ளிகள் அதிகரித்தது. ஆனால் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய முதல் ஐந்து நிமிடங்களிலேயே 33.91 புள்ளிகள் சரிந்து 16,314.50 புள்ளிகளை தொட்டது. (நேற்றைய இறுதி குறீயீட்டு எண் 16347.95 ).
இதே போல் தேசிய பங்கு சந்தையின் நிப்டி குறியீட்டு எண் 13.85 புள்ளிகள் குறைந்து 4,733.70 புள்ளிகளை தொட்டது. (நேற்றைய இறுதி குறீயீட்டு எண் 4747.55 ).