கடந்த 2 நாட்களுகளுக்கு முன்பு கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் இன்று ரூ.20க்கு விற்கப்படுகிறது. நாசிக் வெங்காயம் ரூ.22க்கு விற்பனை செய்யப்படுகிறது!
ஆனால் சாம்பார் வெங்காயம் விலை குறைந்துள்ளது. நேற்று கிலோ ரூ.19க்கு விற்கப்பட்ட சாம்பார் வெங்காயம் இன்று ரூ.16க்கு விற்கப்படுகிறது.
இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் விற்கப்படும் காய்கறி விலைகள் (ஒரு கிலோ) வருமாறு :
பெரிய வெங்காயம் ரூ.20
நாசிக் வெங்காயம் ரூ.22
சின்ன வெங்காயம் ரூ.16
கத்தரிக்காய் ரூ.08
பீன்ஸ் ரூ.24
வெண்டைக்காய் ரூ.14
புடலங்காய் ரூ.06
கேரட் ரூ.16
தக்காளி ரூ.10
முருங்கைக்காய் ரூ.15
உருளை கிழங்கு ரூ.13
கோஸ் ரூ.05
முள்ளங்கி ரூ.05
பாகர்காய் ரூ.10
அவரைக்காய் ரூ.25
மிளகாய் ரூ.10
சேனைக்கிழங்கு ரூ.10
இது குறித்து வியாபாரிகள் முருகன, சின்னராசு, ராஜா ஆகியோர் கூறுகையில், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தமிழகத்திற்கு வரும் வெங்காய வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. மேலும் திருமண சீசன் களைகட்டியுள்ளதால் தற்போது விலை கூடியுள்ளது. இதேபோல் மற்ற காய்கறிகளின் வரத்தை பொறுத்து விலை நிர்ணயிக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.
பழங்களின் விலைகள் (ஒரு கிலோ) :
ஆப்பிள் ரூ.40
ஆரஞ்ச் ரூ.25
தர்பூஸ் ரூ.06
சாத்துக்குடி ரூ.06
இதே போல் மற்ற பழங்களின் விலைகள் அதிகரிப்பதும், குறைவதுமாக இருக்கிறது என்று வியாபாரி எஸ். மியாசா தெரிவித்தார்.