கடந்த ஒரு ஆண்டில் காய்கறிகளின் விலைகளில் 27 விழுக்காடு விலை ஏற்றமும், அதே சமயம் சர்க்கரை விலையில் சரிவும் ஏற்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலக் கட்டத்தில் இருந்து இதுவரை காய்கறிகளின் விலைகளில் சுமார் 27 விழுக்காடு விலை ஏற்றமும், சர்க்கரை விலையில் 18.17 விழுக்காடு விலைச் சரிவும் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டில் கோதுமையின் விலையில் 10.14 விழுக்காடும், பால் 8.63 விழுக்காடும், அரிசி 6.74 விழுக்காடும் உயர்ந்துள்ளதாக மாநிலங்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் பி.கே. பன்சால் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் குறிப்பிட்டிருந்தார்.
மண்ணெண்னை மற்றும் சமையல் எரிவாயு உருளைகளின் விலைகள் மாற்றமில்லாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு கொள்கைகளை கடைபிடித்து வருகிறது என்றும் பன்சால் கூறினார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பன்சால், பணவீக்கத்திற்கு எந்த விதமான இலக்கையும் அரசு நிர்ணயிக்கவில்லை என்றும் கூறினார்.