Publish Date: Mon, 25 Jun 2007 (19:59 IST)
Updated Date: Mon, 25 Jun 2007 (19:57 IST)
சர்வதேசச் சந்தையில் ஏற்பட்ட இறக்கத்தின் எதிரொலியாக மும்பை சந்தையிலும் தங்கம், வெள்ளி விலைகள் குறைந்துள்ளன!
இன்று காலை வர்த்தகத்தில் 0.999 தர வெள்ளியின் விலை கிலோ ஒன்றிற்கு ரூ.18,240 ஆக இருந்தது. பிறகு மளமளவென்று 70 ரூபாய் சரிந்து ரூ.18,170 ஆனது.
தங்கத்தின் விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.
தங்கம் (99.5 தூய்மையானது) 10 கிராம் ரூ.8,650 (-20)
தங்கம் (99.9 தூய்மையானது) 10 கிராம் ரூ.8,705 (-15)
லண்டன் சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் தங்கத்தின் விலை 648/651 டாலராக உள்ளது. (யு.என்.ஐ.)