அதிக வருவாய்-பாதுகாப்பான முதலீடு!
உங்கள் சேமிப்பிற்கு அதிக வருவாய் கிடைப்பதுடன், அது பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். அத்துடன் உங்கள் சேமிப்பு மாநிலத்தின் வளர்ச்சிக்கும் உதவ வேண்டும் என்று விரும்புகின்றீர்களா?
அப்படியெனில் உங்களது சேமிப்பை, நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய நிறுவனம் “ தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை மேம்பாட்டு நிறுவனம்” தான் என்பதில் சந்தேகமே இல்லை. தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் 22-09-2008ஆம் தேதியிலிருந்து வைப்புத் தொகைகளுக்கு அளித்து வரும் வட்டிவிகிதம் வருமாறு: வட்டி தொடர்ச்சியாக வழங்கும் திட்டம்
குமுலீட்டிவ் வட்டி திட்டம்
கூட்டு வட்டி திட்டம்ரூ.578 செலுத்தினால் 60 மாதம் கழித்து ரூ.1,000 கிடைக்கும் குறைந்,த பட்ச வைப்பு தொகை ரூ.578, இதன் மடங்கிலும் செலுத்தலாம். இதுமட்டுமன்றி, இந்நிறுவனம் 58 வயது நிரம்பிய மூத்த குடிமக்களிடமிருந்து (senior citizens) பெறப்படும் 12 மற்றும் 24 மாதங்களுக்கான வைப்புத் தொகைகளுக்கு கூடுதலாக வட்டி 0.25 விழுக்காடும், 36, 48 மற்றும் 60 மாதங்களுக்கான வைப்புத் தொகைகளுக்கு 0.50 விழுக்காடு வட்டி வழங்கி வருகிறது.இந்நிறுவனம், வைப்புத் தொகை செலுத்தும் பொதுமக்களுக்கு பரிவோடு சிறந்த சேவை செய்து வருகிறது. இதனால் தொடர்ந்து இலாபம் ஈட்டியும், வைப்புத் தொகையைஅதிகரித்ததோடு மட்டுமின்றி, வைப்பீட்டாளர்களின் மனதில் நிலையான இடத்தைப் பெற்றுள்ளது. மேலும் வைப்பீடுகளுக்கு அதிக வட்டி வழங்குவதாகக் கூறி சில தனியார் நிதி நிறுவனங்கள் செய்த நிதி மோசடிகள் காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தின் மீது அசையாத நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இதுமட்டுமன்றி, இந்நிறுவனம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அளிக்கும் வட்டியை விட ஒரு சதவிகிதம் அதிகம் வழங்குவதன் பயனாக 1991.92ஆம் ஆண்டில் ரூ.2.09 கோடியாகஇருந்த வைப்புத் தொகை 19-09-2008 அன்று ரூ.2937.15 கோடியாக வளர்ந்துள்ளது. அதே போன்று, 1991-92ஆம் ஆண்டில் 816 ஆக இருந்த வைப்புத் தொகை செலுத்தியவர்களின் எண்ணிக்கை, 19-09-2008 அன்று 3,05,998 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனத்தைப் பற்றிய சிறு விபரம்:
தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும்அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம் 27.06.1991 ஆம் தேதி நிறுவப்பட்டது. இந்நிறுவனம் பாரத ரிசர்வ் வங்கியில் வங்கிசாரா நிதிநிறுவனமாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கமானது அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறிப்பாக தமிழ்நாடு மின் திட்டங்களுக்கு, மின் உற்பத்தி, மின் பங்கீடு மற்றும் மின் வினியோகத் திட்டங்களுக்கு தேவையான நிதியைத் திரட்டுவதாகும்.இந்நிறுவனத்தின் அனுமதிக்கப்பட்ட மூலதனம் ரூ.50 கோடியாகும். இதில் செலுத்தப்பட்ட மூலதனம் ரூ.22 கோடி. இந்நிறுவனம் வழங்கும் கடனுதவி. இந்நிறுவனத்தால் திரட்டப்படுகின்ற நிதி பெரும்பகுதி தமிழ்நாடு மின் வாரியத்தின் மின் உற்பத்தி / மின் பங்கீடு மற்றும் மின் விநியோகத் திட்டங்களுக்குக் கடனாக அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிறுவனம் தொடங்கிய நாள் முதல் ரூ.8772.57 கோடிகளை தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கடனாக அளித்துள்ளது. இதில் 10-09-2008 ஆம் தேதி நிலவரப்படி நிலுவையில் உள்ள நிகர கடன் தொகை ரூ.3,534.61 கோடியாகும்.மேலும், இந்நிறுவனம் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றிற்கும் ரூ.105 கோடி கடன் வழங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் அரசுத் திட்டங்கள் செயலாக்கம்.
சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இந்நிறுவனம் 2,32,174 குழந்தைகளுக்காக, இதுவரை ரூ.353.59 கோடி (19/09/2008 வரை) வைப்புத் தொகையாக பெற்றுள்ளது.
திருக்கோயில்களின் ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் 19-09-08 வரை ரூ.25.51 கோடியை, 10,202 திருக்கோயில்களிடமிருந்து இந்நிறுவனம் வைப்புத் தொகையாகப் பெற்றுள்ளது.
பள்ளி மாணவ, மாணவியரின் வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ அவர்களது கல்வி மற்றும் பராமரிப்புக்காக, நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.3.75 கோடிகளை (19/09/2008 ஆம் தேதி வரை) வைப்பு தொகையாக பெற்றுள்ளது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட 150 ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள் மற்றும் திருமணம் ஆகாத வளரிளம் பெண்களின் பெயரில் வைப்பீடு செய்ய அரசிடமிருந்து ரூ.6.76 கோடிகளை (19/09/2008 ஆம் தேதி வரை) வைப்பு நிதியாக பெற்றுள்ளது.
இந்நிறுவனம் துவக்கத்தில் இருந்து தொடர்ந்து இலாபம் ஈட்டி வருகிறது. செலுத்தப்பட்ட மூலதனத்தில் 20 விழுக்காடு ஈவுத்தொகையாக பன்னிரண்டு ஆண்டுகளாக கடந்த 1995-1996 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அரசிற்கு வழங்கி வருகிறது.
இந்நிறுவனம் 2006-07 நிதியாண்டு வரை ஈவுத் தொகையாக மொத்தம் ரூ.47.62 கோடி தமிழ்நாடு அரசுக்கு வழங்கியுள்ளது.