பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் குறைந்திருக்கும் என்று தெரிகிறது. காலையில் நிஃப்டி 4,500 என்ற அளவில் தொடங்கும். இந்நிலையில் அதிக அளவு பங்குகளை விற்பனை செய்வார்கள்.
இதனால் நிஃப்டி மேலும் குறைந்து 4470-4440 என்ற அளவுக்கு குறையும். இந்த அளவுக்கு குறைந்தால் பங்குகளை விற்பனை செய்வதில் அதிக ஆர்வம் காண்பிப்பார்கள்.
நிஃப்டி மேலும் குறைந்து 4,400 என்ற அளவில் வரும் இதற்கு மாறாக நிஃப்டி 4545 என்ற அளவில் இருந்தால் பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்துவார்கள். இதனால் நிஃப்டி 4570-4600 என்ற அளவிற்கு உயரும் என்று எதிர்பார்க்கலாம்.
நேற்றைய நிலை!
பங்குச் சந்தைகளில் நேற்று கடைசி ஒரு மணி நேரத்தில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. இறுதியில் நிஃப்டி சிறிது அதிகரித்தது.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும், ஹெட்ச் நிதி நிறுவனங்களும் பங்களை விற்பனை செய்து இலாப கணக்கு பார்த்தன. வாகன உற்பத்தி, இயந்திர தாயரிப்பு, நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு ஆகிய நிறுவனங்களின் பங்குகளை வாங்கினார்கள்.
வங்கி, உலோக உற்பத்தி, மின் உற்பத்தி, ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்தனர். கடைசி நேரத்தில் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. உள்நாட்டு வர்த்தகர்கள் சர்க்கரை, உர ஆலைகளின் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் செலுத்தினர்.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இலாப கணக்கை பார்ப்பதற்காக பங்குகளை விற்பனை செய்தன. இதே போல் ஹெட்ச் நிதி நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்தன. மிட் கேப், சுமால் கேப் பிரிவு பங்குகளையும் விற்பனை செய்தனர்.