Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை உயருமா?

Advertiesment
பங்குச் சந்தை உயருமா?
, திங்கள், 21 ஜூலை 2008 (10:44 IST)
திங்கட் கிழமை பங்குச் சந்தையில் வர்த்தகம் ஆரம்பிக்கும் போது நிஃப்டி 20 முதல் 35 புள்ளிகள் வரை அதிகரிக்கலாம். காலையில் நிஃப்டி 4120 முதல் 4130 வரை வர்த்தகம் நடப்பதை பார்க்கலாம். பிறகு நிஃப்டி 4160-4200 வரை உயரலாம்.

நிஃப்டி 4200 விட அதிகரித்தால் அதிக அளவு பங்குகளை வாங்குவதை பார்க்கலாம். இந்த அளவை விட அதிகரித்தால் நிஃப்டி சிறிது நேரத்திற்கு 4225-4240 என்ற அளவில் இருக்கும். இதற்கு மாறாக நிஃப்டி 4045 ஆக தொடங்கி இதை விட குறைந்தால் பங்குகளை அதிக அளவு விற்பனை செய்வதை பார்க்கலாம். இதனால் நிஃப்டி 4010-3970 வரை குறைய வாய்ப்புள்ளது. 3970 என்ற அளவைவிட குறைந்தால் மேலும் குறைந்து 3925-3900 என்ற அளவிற்கு சரியும்.

இனி வரும் நாட்களில் சென்செக்ஸ் 13780-14100-14400-14690 என்ற அளவுகளில் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

வெள்ளிக் கிழமை கண்ணோட்டம்!

பங்குச் சந்தையில் வெள்ளிக் கிழமை வர்த்தகம் சிறப்பாக நடந்தது. இரண்டாவது நாளாக குறியீட்டு எண்கள் அதிகரித்தன. வங்கி, ரியல் எஸ்டேட், பெட்ரோலிய நிறுவனங்கள், இயந்திர உற்பத்தி, மின் உற்பத்தி, நுகர்வோர் பொருட்கள் பிரிவு பங்குகளின் விலை அதிகரித்தன. இந்த வாரத்தின் சென்செக்ஸ்சின் குறைந்த பட்ச அளவான 12,514 இல் இருந்து 1100 புள்ளி அதிகரித்தது. இதே போல் நிஃப்டியின் குறைந்தபட்ச அளவான 3,790 இல் இருந்து 300 புள்ளி உயர்ந்தது.

இந்த வார தொடக்கத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாதது பங்குச் சந்தையை பாதிக்கும். ஜூலை 8 ஆம் தேதி இடதுசாரி கட்சிகள் மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றனர். இதனால் மத்திய அரசு சிறுபான்மை அரசாக மாறியது. நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் இ‌ன்று‌‌ம், நாளையு‌ம் நடைபெறுகிறது. இதில் மத்திய அரசு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வரும். உத்தர பிரதேச மாநில கட்சியான சமாஜ்வாதி கட்சி ஆதரவு தெரிவித்து இருப்பதால், நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

வெள்ளிக் கிழமை வர்த்தகம் நடக்கும் போது சென்செக்ஸ் 527 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 13,684 வரை அதிகரித்தது. பிறகு இறுதியில் 523 புள்ளி உயர்ந்து குறியீட்டு எண் 13,635 ஆக முடிந்தது. இது முந்தைய நாளை விட 3.99% அதிகம். நிஃப்டி 4110 புள்ளிவரை அதிகரித்து பிறகு 4100 ஆக இறங்கி இறுதியில் 4092 ஆக முடிந்தது.

இது முந்தைய நாளை விட 145 புள்ளி அதிகம். ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், பர்தி ஏர்டெல், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஒ.என்.ஜி.சி, ஹெச்.டி.எப்.சி, லார்சன் அண்ட் டூப்ரோ பங்கு விலைகள் அதிகரித்தன. நிஃப்டி ப்யூச்சர் சந்தையில் புதிதாக 51.7 லட்சம் பங்குகளுக்கு வர்த்தகம் நடந்தது.

நிஃப்டி 3900 ஆக இருக்கும் போது 12.9 லட்சம் பங்குகளைக்கு ஒப்பந்தம் நடைபெற்றது.

நிஃப்டி 4000 ஆக இருக்கும் போது 6.8 லட்சம் பங்குகளைக்கு ஒப்பந்தம் நடைபெற்றது.

நிஃப்டி 4000 ஆக இருக்கும் போது 2.2 லட்சம் பங்குகளின் ஒப்பந்தம் முடிந்தது.

சென்ற வாரம் வியாழன், வெள்ளிக் கிழமைகளில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், ரொக்கம் மற்றும் முன்பேர சந்தையில் ரூ.5000 கோடி அளவிற்கு பங்குகளை வாங்கியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil