பரஸ்பர நிதி நிறுவனங்கள் வெளியிடும் யூனிட்டுகள், அதன் வரி விலக்கு, முதலீடு பற்றிய சில கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் எந்த நிறுவனத்தின் பங்குச் சந்தையின் தொடர்புடைய சேமிப்பு திட்டங்களை (இ.எல்.எஸ்.எஸ் ) பரிந்துரைக்கின்றீர்கள் ?
இதில் அதிக லாபம் தரும் திட்டம் என்று எதையும் உறுதியாக கூற முடியாது. ஒவ்வொரு நாளும் முன்னணியில் உள்ள நிறுவனம் மாறிக் கொண்டே இருக்கும். எனவே இதுதான் சிறந்த நிறுவனம் என்று எதையும் குறிப்பிட்டு சுட்டிக் காட்ட முடியாது.
ஸ்டேட் பாங்க், பிடிலிட்டி, ஹெச்.டி.எப்.சி, டி.எஸ்.பி. மெரில் லாஞ்ச் பண்ட், கோடக் ஆகிய நிறுவனங்களின் பங்குச் சந்தையின் சேமிப்பு தொடர்புடைய திட்டங்களில் முதலீடு செய்யவது பற்றி பரிசீலிக்கலாம்.
பங்குச் சந்தையின் தொடர்புடைய சேமிப்பு திட்டங்களில் கிடைக்கும் இலாபத்தை, நான் கூடுதல் முதலீடாக கருத முடியுமா ? உதாரணமாக நான் சென்ற வருடம் ரூ.1,000 முதலீடு செய்திருந்தேன். இதில் இருந்து கடந்த வருடம் ரூ.300 இலாபம் கிடைத்துள்ளது. இதில் நான் ரூ. 300 ஐயும் என் முதலீடாக குறிப்பிட முடியுமா?
இந்த திட்டத்தில் செய்த முதலீட்டிற்கு கிடைத்த இலாபத்தையும் சேர்த்து அதிகரித்த தொகையை, கூடுதல் முதலீடாக கருத முடியாது. நீங்கள் இலாபத்தை (டிவிடென்ட்) மீண்டும் முதலீடு செய்யும் திட்டத்தின் யூனிட்டுகளை வாங்கி இருந்தால், இந்த திட்டத்தில் டிவிடென்ட் அறிவிக்கப்பட்ட பிறகு யூனிட் வாங்கி இருந்தால் மட்டுமே முதலீடாக கருத முடியும்.
பங்குச் சந்தையின் தொடர்புடைய சேமிப்பு திட்டங்களில் (இ.எல்.எஸ்.எஸ் ) வரி விலக்கு அனுமதிக்கப்பட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு வருமான வரி செலுத்த வேண்டுமா?
தற்போது உள்ள வருமான வரிச் சட்டப்படி பங்குச் சந்தையுடன் இணைந்த எல்லா பரஸ்பர நிதிகளில் இருந்து கிடைக்கும் நீண்டகால முதலீட்டிற்கு வரி விலக்கு உண்டு. இ.எல்.எஸ்.எஸ் திட்டங்கள் மூன்று வருடங்களுக்குள் விற்பனை செய்ய முடியாதவைகள். இதில் இருந்து கிடைக்கும் வருவாய்க்கும் வரி விலக்கு உண்டு.
வருமான வரிச் சட்டம் 80 சி பிரிவின் படி இ.எல்.எஸ்.எஸ் யூனிட்டுகளில் முதலீடு செய்யும் தொகைக்கு வருமான வரி விலக்கு பெற முடியுமா?
வருமான வரிச் சட்டம் 80 சி பிரிவின் கீழ், எல்லா இனங்களிலும் சேர்த்து அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை வருமான வரிவிலக்கு பெற முடியும்.
நான் எஸ்.ஐ.பி. எனப்படும் மாதந்திர சேமிப்பு திட்டத்தின் படி இ.எல்.எஸ்.எஸ். யூனிட்டுகளில் முதலீடு செய்ய விரும்புகின்றேன். எந்த பரஸ்பர நிதி நிறுவனத்தின் யூனிட்டுகளை வாங்கலாம் ?
எஸ்.ஐ.பி. எனப்படுவது நீங்கள் ஒவ்வொரு மாதமும் சேமிப்பு போல யூனிட்டுகளில் முதலீடு செய்யும் முறையே. எந்த திட்டம் சிறந்தது என்பதை பொறுத்த வரை, எதையும் உறுதியாக கூற முடியாது. இது ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டே இருக்கும். எனவே இதுதான் மிகச்சிறந்த பரஸ்பர நிதி என்று எதையும் குறிப்பிட்டு சுட்டிக்காட்ட முடியாது. சமீப காலத்தில் ஸ்டேட் பாங்க், பிடிலிட்டி, ஹெச்.டி.எப்.சி, டி.எஸ்.பி. மெரில் லாஞ்ச் பண்ட், கோடக் ஆகிய நிறுவனங்களின் பரஸ்பர நிதி யூனிட்டுகள் அதிக வருவாயை கொடுத்துள்ளன.
வருமான வரி விலக்கை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் (குளோஸ்டு என்ட் எனப்படும் குறிப்பிட்ட காலம் வரை விற்பனை செய்ய அனுமதி இல்லாதது மற்றும் ஓப்பன் என்ட் எனப்படும் எப்போது வேண்டுமெனிலும் யூனிட்டுகளை விற்பனை செய்யும்) எந்த பரஸ்பர நிதி யூனிட்டுகள் வாங்குவது சிறந்தது ?
உதாரணமாக ஒரே முறை மொத்தமாக முதலீடு செய்வது அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் முதலீடு செய்வது. ஒருவர் ரூ.1 லட்சம் முதலீடு செய்வதாக இருந்தால் எந்த முறையில் முதலீடு செய்வது சிறந்தது. எந்த பரஸ்பர நிதியில் முதலீடு செய்வது சிறந்தது?
ஓபன் என்ட் பண்ட், குளோஸ் என்ட் பண்ட் இரண்டிலும் பங்குச் சந்தையுடன் இணைந்த முதலீட்டுத் திட்டங்களினால் (இ.எல்.எல்.எஸ்), இந்த திட்டங்களை வெளியிட்ட பரஸ்பர நிதி நிறுவனங்கள் இலாபகரமாக இயங்கியுள்ளனவா என்பதை கணிக்க முடிந்தது. கடந்த சில ஆண்டுகளாக உள்கட்டமைப்பு திட்டங்களின் யூனிட்டுகளில் லாபம் கிடைத்துள்ளன. நமது நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் அதிக அளவு தேவைப்படுவதால், பல பரஸ்பர நிதி நிறுவனங்கள் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்யும் வகையில் யூனிட்டுகளை வெளியிடுகின்றன. இதனால் முதலீடு செய்பவர்களுக்கும் உள்கட்டமைப்பு சார்ந்த திட்டங்களில் கவனம் திரும்பியுள்ளது.
இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த மாதிரியான பங்குச் சந்தையில் ஒரே தடவையில் முதலீடு செய்வதை விட, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் முதலீடு செய்யும் எஸ்.ஐ.பி திட்டம் சிறந்தது. பங்குச் சந்தையில் அதிக வேறுபாடு இல்லாமல்,சீராக இருந்தால் ஒரே தவணையில் முதலீடு செய்வது சிறந்தது.
ஒருவர் ரூ.1 லட்சம் முதலீடு செய்வதாக இருந்தால் 40 விழுக்காடு சென்செக்ஸ், நிஃப்டி பிரிவில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்யும் திட்டத்திலும், 30 விழுக்காடு மிட் கேப் எனப்படும் நடுத்தர நிறுவனங்களில் மூதலீடு செய்யும் திட்டங்களிலும், 30 விழுக்காடு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்களிலும் முதலீடு செய்வது சிறந்தது.
நான் ஒரே தடவையில் மூன்று ஆண்டுகள் வரி விலக்கு பெறும் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றேன், எஸ்.பி.ஐ. மேக்னம் சிறந்ததா அல்லது டி.எஸ்.பி. மெரில் லாஞ்ச் பண்ட் சிறந்ததா?
இரண்டு திட்டங்களிலும் கடந்த ஒரு வருடத்திலும், அதற்கு முந்தைய காலத்திலும், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் வருவாயை விட அதிக வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஒரு வருட செயல்பாட்டை ஆய்வு செய்தால் டி.எஸ்.பி. மெரில் லாஞ்ச் பண்ட் இலாபகரமானதாக இருக்கிறது.
* லோகேஷ் நதானி அல்மோன்ட்ஜ் குளோபல் செக்யூரிட்டி நிறுவனத்தின் பங்கு சந்தை முதலீட்டு பிரிவின் முதன்மை அதிகாரியாக உள்ளார். இணைய தளம் - personalfinancewindow.com