இன்று பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் ஆரம்பிக்கும் போதே நிஃப்டி 30 முதல் 40 புள்ளிகள் வரை அதிகரித்து குறியீட்டு எண் 4840 என்ற நிலையில் இருக்கும். இதற்கு பிறகு 4870/4890. வரை உயர வாய்ப்புள்ளது. நிஃப்டி அதிகரித்து கொண்டே போனால், 4900-4925 என்ற அளவு அதிகரித்த பின், பங்குகள் அதிக அளவில் விற்பனை செய்யும் போக்கை காணலாம்.
மற்ற நாடுகளில் பங்குச் சந்தையின் நிலையை பொறுத்தே, இங்கும் இருக்கும். ஒரு வேளை நிஃப்டி 4740 க்கும் உயர்ந்து இருந்தால், இன்று நட்க்கும் வர்த்தகத்தில் பங்கு விலை உயரும்.
தொழில் வர்த்தக நிறுவனங்கள் மார்ச் 15 ந் தேதிக்குள் வருமான வரியின் அட்வான்ஸ் வரியை செலுத்த வேண்டும். இந்த சமயத்தில் பங்குச் சந்தையில் ஒரு திருப்பம் ஏற்படும்.
நிஃப்டியின் போக்கு.
நிஃப்டி 4800/4840/4865 என்ற நிலையில் இருந்து, 4865 க்கும் அதிகரித்தால், இதன் பிறகு 4890/4915/4945 வரை உயர வாய்ப்புள்ளது.
இதற்கு மாறாக நிஃப்டி 4780/4740/4705 என்று குறைந்து, 4705 என்ற அளவை தொட்டால் அதிக அளவு பங்குகளை விற்பனை செய்வார்கள். இதனால் l 4680/4660/4625 என்று குறையும் வாய்ப்பு உள்ளது.
இன்று ரிலையன்ஸ் பெட்ரோலியம், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ்,பார்தி ஏர்டெல்,ஓ.என்.ஜி.சி,கோர் ப்ராஜக்ட்,சியேட்,எஸ்ஸார் ஆயில்,தேனா பாங்க்,ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்,ஜே.பி.அசோசியேட்ஸ் ஆகிய பங்குகளில் வர்த்தகம் நடக்க வாய்ப்பு உண்டு.
நேற்று பங்குச் சந்தை கண்ணோட்டம்
நேற்று காலையில் இருந்து குறைந்து கொண்டே வந்த பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் மதியத்திற்கு பிறகு அதிகரித்தன. ஹாங்காங் பங்குச் சந்தை குறியீட்டு எண் ஹாங்சங் 800 புள்ளிகள் அதிகரித்தது. இது காலையில் குறைந்து இருந்தது, பிறகு அதிகரி்க்க துவங்கியது. இதனால் இங்கும் காலையில் குறைந்து இருந்த சென்செக்ஸ் 550 புள்ளிகளும், நிஃப்டி 170 புள்ளிகளும் அதிகரித்தன.
காலையில் ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் பங்கு விலை அதிக அளவு குறைந்து இருந்தது. இதன் விலை மதியத்திற்கு பிறகு அதிகரித்தது.
நேற்று ரிலையன்ஸ் பெட்ரோலியம், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ்,ரிலையன்ஸ் எனர்ஜி,அட்லேப்ஸ்,கேரின் இந்தியா,டிஸ்கோ,பார்தி ஏர்டெல், ஜே.பி.அசோசியேட்ஸ், ஜி.எம்.ஆர் இன்ப்ரா,ஓ.என்.ஜி.சி, எஸ்ஸார் ஆயில்,ஒன் மொபைல், பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, ஆகிய பங்குகள் வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினார்கள். நேற்று பங்குச் சந்தையில் மொத்தம் ரூ.65 ஆயிரம் கோடி அளவிற்கு வர்த்தகம் நடந்தது.
சென்செக்ஸ் 51 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 15,923 என்ற அளவிலும், நிஃப்டி 28 புள்ளிகள் அதிகரித்து 4,800 என்ற அளவில் முடிந்தது.