Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூடுதல் வரி நிரந்தரமானதா?

கூடுதல் வரி நிரந்தரமானதா?
, வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (20:51 IST)
webdunia photoFILE
மத்திய அரசுக்காக நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பட்ஜெட்டில் வருமான வரி, கலால் மற்றும் சுங்க வரிகள் மீது கூடுதல் வரி விதிப்பது வாடிக்கையாகிவிட்டது.

மாநில அரசுகளும் தங்கள் பங்குகளுக்கு விற்பனை வரி மீது கூடுதல் (Surcharge) வரி விதிக்கின்றனர

கூடுதல் வரி அல்லது செஸ் என்பது அவசர நிலைமையில் குறுகிய காலத்திற்கு வரிகள் மீது போடப்படும் கூடுதல் வரிகளாகும். இது குறிப்பிட்ட நோக்கத்திற்காக, ஒரு வருடம் அல்லது ஐந்து வருடங்கள் என குறுகிய காலத்திற்கு வசூலிக்கப்பட்டால் நியாயம். ஆனால் இதுவே நிரந்தரம் என்றால், கூடுதல், செஸ் வரி என்று மறைமுகமாக வரியை உயர்த்துவதை விட, நேரடியாகவே வரியை உயர்த்திவிடலாம்.

நாடு முழுவதும் வறட்சி ஏற்பட்டிருக்கும் போது அல்லது அந்நிய நாட்டு படையெடுப்பின் போது அரசுக்கு அதிகளவு வருவாய் வேண்டும். அந்த மாதிரியான அவசர நிலை காலங்களில் குறுகிய காலத்திற்கு கூடுதல் வரி விதித்தால் வரி கட்டுபவர்கள் பொறுத்துக் கொள்வார்கள்.

இதுவே தொடர்ந்தால், நல்ல குடிமகனாக வரியை கட்டுங்கள். அடிப்படை வசதிகளை பெருக்க தவறாது வரியை கட்டுங்கள். வரி கட்டுவது உங்கள் குடிமகனின் தலையாய கடமை என்று அறிவுரை கூறுவதற்கு ஆட்சியாளர்கள் தார்மீக ரீதியாக தகுதியை இழந்து விடுவார்கள்.

முன்பு கார்கில் போரின் போதும், குஜராத் நில நடுக்கம் போன்ற இயற்கை இடர்பாடுகளின் போது கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இந்த வரியை செலுத்தியவர்கள் எவ்வித ஆட்சேபனையும் இன்றி செலுத்தினார்கள்.

ஆனால் இதுவே தொடர் கதையாக மாறினால் வரி செலுத்த வேண்டும் என்று மனதார நினைப்பவர்களின் தேசபக்தி கூட மழுங்கிப் போய்விடும்.

2004-05 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அடிப்படை கல்விக்கான செலவுகளை ஈடுகட்ட வருமான வரி மீது 2 விழுக்காடு கூடுதல் வரி விதிக்கப்பட்டது.

2007-08 ஆம் ஆண்டு உயர்கல்வி செலவுக்காக மேலும் கூடுதலாக 1 விழுக்காடு கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இவை சமீப காலங்களில் போடப்பட்ட கூடுதல் வரிகள்.

இவை மட்டுமல்லாமல் 1999-2000 ஆம் ஆணடு பற்றாக்குறையை ஈடுகட்டவும், கூடுதல் செலவினங்களுக்காகவும், மேம்பாட்டு செலவுக்காகவும் 10 விழுக்காடு கூடுதல் வரி விதிக்கப்பட்டது.

இது அடுத்த வருட பட்ஜெட்டில் நீக்கப்படவில்லை. பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி தேவைப்படுவதாக கூறி, அப்படியே தொடர்ந்தது. அத்துடன் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமாக வருவாய் இருப்பவர்களுக்கு கூடுதல் வரி 10 விழுக்காட்டில் இருந்து 15 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டது.

இந்த கூடுதல் வரிகள் எதாவது புது புது காரணகங்கள் கூறி வருடா வருடம் அப்படியே தொடர்கிறது. அது எந்த கட்சியைச் சேர்ந்தவர் நிதி அமைச்சராக வந்தாலும் கூட, கூடுதல் வரியை விதிப்பதிலும், தொடர்வதிலும் ஒற்றுமையாக ஒரே மாதிரியாகவே இருக்கின்றனர் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

இதை விட நிதி அமைச்சர்கள் வெளிப்படையாக நிரந்தரமாகவே வரியை உயர்த்திவிடலாம். நமது மத்திய மாநில அரசுகள் வரியை குறைத்திருப்பதாக மார்தட்டிக் கொண்டு, கூடுதல் வரி, செஸ் என்ற போர்வையில் வரிச்சுமையை அதிகரிப்பதை இனிமேலாவது நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த வருடம் பிப்ரவரி 29 ந் தேதி நிதி அமைச்சப் ப.சிதம்பரம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை சமர்ப்பிக்கும் போது, கூடுதல் வரி என்ற கூடுதல் சுமையை நீக்க வேண்டும்.

அரசு நேரடி வரி வருவாயை இழக்க விரும்பாவிட்டால் நேரடியாகவே வரிகளை உயர்த்தி விடலாம்.

எங்களஇணைதளத்திலபதிவசெய்யுங்கள்.

உங்களகருத்தபரிமாற்றமமத்திய, மாநிஅரசுகளமக்களினஓட்டம், தேவைகளபற்றி அறிஉதவியாஇருக்கும்.

இதிலதனிநபர்கள், வியாபாரிகளசங்கமபோன்அமைப்புகள், குடும்நிதி அமைச்சர்களாபெண்கள், அவர்களஅமைப்புக்கள், தொழிலஅமைப்புக்கள், தொழிலாளரசங்கங்களஎல்லோருமபங்ககொள்ளலாம்.

உங்களகருத்துக்களஎழுதுங்கள்.

நீங்களசெய்வேண்டியது:

கீழஅளிக்கப்பட்டுள்பகுதியிலஉங்களகருத்துக்களபதிவசெய்யுங்கள்,

அல்லதமினஅஞ்சலவாயிலா[email protected] அனுப்புங்கள்,

அல்லதஇணைதளத்திலதட்டச்சசெய்முடியாதவர்களவெள்ளைத்தாளிலஆங்கிலமஅல்லததமிழிலஉங்களகருத்துக்களஒரபக்கமமட்டுமஎழுதி கீழ்கண்முகவரிக்கதபாலஅல்லதகூரியரிலஅனுப்பலாம்:

The Editor - Tamil,
Webdunia.com(India)pvt. Ltd.,
No:2, Kriba Sankari Street,
West Mambalam,
Chennai 600 033.

Share this Story:

Follow Webdunia tamil