Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாம்பழ மகசூல் மகிழ்ச்சி கொடுக்க .....

Advertiesment
மாம்பழ மகசூல்  மகிழ்ச்சி கொடுக்க .....

Webdunia

இது மாம்பழ ஸீஸன். விவசாயிகள் அறுவடையின் போது கீழ்க் கண்ட முறைiளக் கையாண்டால், நல்ல பம்பர் மகசூல் மட்டுமல்லாமல், விளைச்சலுக்கு நல்ல விலையும் கிடைக்கும். மக்களுக்கும் நல்ல தரமான பழங்கள் கிடைக்கும்.

எந்த நிலையில் பழத்தைப் பறிக்க வேண்டும் !



பசiசயிலிருந்து லேசாக மஞ்சளுக்கு மாறும் போது
பறிப்பது உசிதம்; அல்லது தானாகவே ஒன்றிரண்டு பழங்கள் மரத்திலிருந்து விழுந்தால் பறிப்பதற்கு சரியான சமயமாக எடுத்துக் கொள்ளலாம்.


அறுவடையை விடியற்காலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.


கூடிய வரை ஒவ்வொரு பழத்தையும் கையாலேயே பறிப்பது நல்லது. பறிப்பதற்கு வேறு உபகரணங்கள் உபயோகித்தால் பழங்கள் கீழே விழுந்து அடிபட நேரிடும்.


பறித்த பழங்களை நிழலில் வைக்க வேண்டும்.


அதன் அளவுக்கேற்பவும், கனியும் நிலைக்கேற்பவும் பிரித்து வைத்தால், சந்தையில் நல்ல விற்பனையை எதிர்பார்க்கலாம்.


அடிபட்ட, அழுகிய பழங்களை எடுத்து போட்டு விடவேண்டும்.


hக்கிங் செய்வதற்கு முன் அறுவடை செய்த பழங்களை 500 டி.டி.எம். எத்ரேல் (நுவாசநட) கரைசலில் போட்டு எடுத்ததால் எல்லாப் பழங்களும் ஒரே சமயத்தில் விரைவாக கனியும் ; அதே சமயம் நல்ல நிறமும் கிடைக்கும்.


மாம்பழங்களை சாக்குப் பையில் பாக்கிங் செய்து அனுப்பக் கூடாது.


காற்று இடைவெளியுடன் உள்ள மரப் பெட்டிகளில் பாக்கிங் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு பழத்தையும் தனித் தனியாக நியூஸ் பேப்பரில் சுற்றி பெட்டியில் அடுக்கினால் அவைகளுக்கு சேதம் ஏதும் ஏற்படாது.


விற்பனைக்கு அனுப்பும் முன் 10 முதல் 12 டிகிரி குளிர் நிலையில் வைக்கப்படுமானால் சந்தையில் கூடுதல் காலம் விற்பனைக்கேற்றபடி பழங்கள் இருக்கும்.


பறித்த பழங்களை நன்கு கனிய வைக்க ஒரு அறையில் வைக்கோலை பரப்பி அதன் மேல் அடுக்கி வைக்க வேண்டும். அறையின் ஒரு மூலையில் ஈரத்தன்மை கொண்ட கால்ஷியம் கார்பைட் ரசாயனத்தை சிறிதளவு வைக்க வேண்டும்.. ரசாயன மாற்றத்தால் உருவாகும் அசிட்டலின் வாயு மூலமாக பழங்கள் (காய்கள்) சீக்கிரம் பழுப்பது மட்டுமல்லாமல். நல்ல மணமும், நிறமும் கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil