Publish Date: Tue, 03 Sep 2013 (19:24 IST)
Updated Date: Tue, 03 Sep 2013 (19:24 IST)
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளதால் வங்க கடலின் கடலோர மாவட்டங்களில் 5ஆம் தேதி முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில்,
செப்டம்பர் 2ம் தேதி வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளது.
இதனால் செப்டம்பர் 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுகோட்டை, சேலம், நீலகிரி, கோவை, தேனி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழையும், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பரவலாக மிதமானது முதல் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 5ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள தேதியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.