காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 70.2 அடியாக இருந்தது. அணையின் மொத்தக் கொள்ளளவு 120 அடி ஆகும்.
அணைக்கு வினாடிக்கு 251 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது என்றும், அணையில் இருந்து வினாடிக்கு 7,005 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 102 கனஅடி தண்ணீரும், வெண்ணாறில் 3,824 கனஅடி தண்ணீரும் கல்லணைக் கால்வாயில் 1,608 கனஅடி தண்ணீரும், கொள்ளிடக் கால்வாயில் 2,615 கனஅடி தண்ணீரும் பாசத்திற்காகத் திறந்துவிடப்படுகிறது.